'பெக்கோ சமனின்" மனைவிக்கு இன்று நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

இலங்கையிலிருந்து இந்தோனேசியாவுக்கு தப்பிச் சென்று அங்கு கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவனான 'பெக்கோ சமன்' என அழைக்கப்படும் என்.என். பிரசங்கவின் மனைவி மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சாஜிகா எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை இன்று (04) பிறப்பித்தார்.

கடந்த மாதம் ஜகார்த்தாவில்  கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றக் கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டபோது, பெக்கோ சமனின் மனைவி மற்றும் அவரது குழந்தை ஆகியோரும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான சாஜிகா, தனது சிறு குழந்தையுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.